இப்ப தேனும் கசக்கிறது முன்னணி இந்திய நிறுவனங்களின் தேனில் சர்க்கரை பாகு கலப்படம், சோதனையில் அம்பலம்... சமீபத்தில் சில பிரபலமான நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் தேன், தூய்மைக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய இந்த சோதனையில், பல நிறுவனங்களின் தேனில் செயற்கை சர்க்கரை பாகை கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.* மருத்துவத்தில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. தேன் பொதுவாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய ஒரு உணவுப்பொருள். தற்போது தொற்றுநோய் பரவி வரும் நிலையில் தொற்றுநோயை எதிர்த்து போராடும் குணம் தேனுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், அதனுடன் சர்க்கரை சேர்ந்தால் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில், மூலக்கூறு மட்டத்தில் ஒரு பொருளின் கலவையை அறிவதற்கான இந்த சோதனை (என்.எம்.ஆர் சோதனை) ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டுள்ளது. தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இந்த சோதனை தேவைப்படுகிறது. அந்த வகையில் டாபர், பதஞ்சலி, பைத்யநாத்...
Popular posts from this blog
மன அழுத்தத்தை போக்கும் பாலாசனம்
நம் உடலில் சேரும் கழிவுப் பொருட்கள் மற்றும் ரத்தத்தில் தேக்கமடையும் கழிவு பொருட்களை அவ்வப்போது நீக்கப்பட வேண்டும் எனில் எளிமையான உடற்பயிற்சிகள் உடலுக்கு அவசியம். அப்படியான பயிற்சிகளில் யோகாசனப் பயிற்சியை சிறந்தது எனலாம். இது உடலை பிற பயிற்சிகளை போல் இருக்க செய்வதில்லை. எனவே அனைத்து உறுப்புகளுக்கும் தடையில்லாமல் ரத்தம் பாய்ந்து ஆரோக்கியத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நாம் இங்கு பார்க்கப்போவது மன அழுத்தத்தை போக்கும் பாலாசனம் என்னும் பயிற்சியை. பாலப் பருவம் என்றால் குழந்தைப் பருவத்தை குறிக்கும். குழந்தை முதலில் அமர்வதற்கு தேர்ந்தெடுக்கும் ஒரு ஆரோக்கியமான இருக்கை முறையை நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பயின்று கொள்ள வலியுறுத்துவதால் இதற்கு “பாலாசனம்” என்று பெயர். இந்த ஆசனத்தை செய்வது மிக எளிது. இது மன அழுத்தத்தை நீக்கும் அற்புத ஆசனம் எனலாம். செய்முறை இரண்டு கால்களையும் மடக்கி வஜ்ராசனத்தில் அமர்வது போல் முழங்கால்கள் மீது அமரவும். அதன் பின் இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி குழந்தைகள் படுப்பது போல் நெற்றி தரையில் படும்படி குனியவும். மூச்சை சீராக விடவும். இதே நிலையில் 15 முதல் 20 வினாடிகள் அ...
உமிழ் நீர் உயிர் நீர்
சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்? உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து! உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். வாழ்வதற்காக உண்டனர். உண்பதற்காக வாழ்ந்தனர். அதனால் தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவை பற்களால் நன்றாக மென்று சாப்பிட்டனர். குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தினார்கள். அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்திருந்தது. வயிற்றுக்குள் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை. தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கண...